Home> Movies
Advertisement

அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..

Rocket Driver : ஃபேன்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அனிருத் வல்லப் தயாரிக்கிறார்.   

அனிருத் தயாரிக்கும் புதிய படம் ராக்கெட் டிரைவர்! போஸ்டர் வெளியானது..

Rocket Driver : ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.  

அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.  

மேலும் படிக்க | பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த அனிருத்..! விரைவில் திருமணமா..?

தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள்.

அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

மேலும் படிக்க | அடேங்கப்பா செம வெயிட் பார்ட்டி தா.. அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More