Home> Movies
Advertisement

ராஷ்மிகாவின் நியூ லுக் – மெர்சலான ரசிகர்கள்

வீட்டில் காஷூவலாக இருக்கும்போது ராஷ்மிகா எடுத்த புகைப்படத்தை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது

ராஷ்மிகாவின் நியூ லுக் – மெர்சலான ரசிகர்கள்

‘புஷ்பா: தி ரைஸ்’படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த அந்த திரைப்படத்தில் ஸ்ரீவல்லியாக கலக்கியிருந்தார் ராஷ்மிகா. படத்தில் சாதுவாக, எளிமையாக பெண்ணாக நடித்திருந்தாலும், நிஜத்தில் ராஷ்மிகா அப்படிப்பட்டவர் இல்லை. மார்டன் டிரஸ் மங்கையாக உலா வருகிறார். அவரின் பல்வேறு காஷ்டியூம் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், வீட்டில் காஷூவலாக இருக்கும் புகைப்படத்தை பார்த்ததில்லை.

ராஷ்மிகாவும் இதுவரை அப்படியான புகைப்படத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்ததில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், தன் தாயுடன் வீடியோ காலில் பேசும்போது அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும், அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | உங்க மாமனார் தான் காரணம்: தனுஷிடம் இளையராஜா கூறிய விஷயம்!

ராஷ்மிகா இன்ஸ்டாகிராம்

தாயுடன் வீடியோ காலில் பேசும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, இன்று மிகவும் அழகாக இருப்பதாக தன்னுடைய அம்மா கூறியதாக குறிப்பிட்டுள்ளார். கருப்பு டி சர்ட், ஒப்பணை செய்யப்படாத தலைமுடியுடன் ஜாலியாக தாயுடன் உரையாடியுள்ளார். ராஷ்மிகா எழுதியுள்ள பதிவில்,” நான் இன்று எப்படி இருக்கிறேன் என்று அம்மாவிடம் கேட்டேன். மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்தார். நான் மிகவும் ஹேப்பி..!” எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | டாப் ஹீரோக்கள் படங்களை பங்கமாய் கலாய்த்த ஆர்ஜே பாலாஜி!

விரைவில் ‘மிஷன் மஜ்னு’

 

புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் ராஷ்மிகாவுக்கு படங்கள் வரிசைகட்டுகின்றன. இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டுக்கும் சென்றுள்ள ராஷ்மிகா, மிஷன் மஜ்னு படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்திரா லீட் ரோலில் நடிக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More