Home> Movies
Advertisement

காலணிகளுக்கென்றே தனி அறையை ஒதுக்கிய பிரபல நடிகை!

காலணிகளை வைப்பதற்கு தனி அறையை உருவாக்கிய ஹாலிவூட் நடிகையின் செயல் வைரல் ஆகி வருகிறத  

காலணிகளுக்கென்றே தனி அறையை ஒதுக்கிய பிரபல நடிகை!

பிரணீதி சோப்ரா ஒரு இந்திய நடிகையாகவும், பல ஹிந்தி படங்களில் பிண்ணனி பாடகியாகவும் இருந்தவர். இவர் ஃபிலிம்பேர் மற்றும் தேசிய திரைப்பட விருது,nIIFA விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.2013-ல் ஃபோர்ப்ஸ் இந்தியா நாளிதழ் வெளியிட்ட பிரபலங்கள் 100 பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்று இருந்தது.  இவருக்கு காலணிகள் என்றால் அலாதி பிரியமாம் , அதனை வைப்பத்திற்கென்றே தனி அறை ஒன்றை ஒதுக்கியுள்ளாராம் . அதனால் இவர் காலணிகள் மீதான ஆர்வத்தை பற்றி கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் கூறுகையில் , “எனக்கு வெவ்வேறு விதமான காலணிகளை அணிவது மிகவும் பிடித்த ஒன்று. நான் எப்போது எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு நான் தேடி செல்வது காலணிகள் விற்பனை செய்யும் கடை தான்.

fallbacks

வித விதமான மாடல்களில் காலணிகளை வாங்கி விடுவேன் , அதனை பார்த்த பலரும் என்னிடம் கேட்பார்கள் ,இத்தனை காலணிகளை வாங்கி நீ என்ன செய்ய போகிறாய்? என்று , ஆனால் அந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை .  நான் கிட்டத்தட்ட 100 ஜோடிக்கு மேற்பட்ட காலணிகளை வைத்திருக்கேன் . இதற்கென்றே நான் பிரத்யேகமாக ஒரு அறையையும் ஒதுக்கி வைத்துள்ளேன் .

fallbacks

அந்த அறையில் சென்று பார்த்தல் அதிக விலை உயர்ந்த வெளிநாட்டு பிராண்டு காலணிகள் யாவும்  வரிசையாக கிட்டத்தட்ட ஒரு கண்காட்சி போல அடுக்கி வைத்திருப்பேன்.  சில சமயங்களில் எனக்கு விருப்பமான டிசைன்களில் நானே காலணிகளை ஆர்டர் செய்து தயாரிக்க சொல்லி வாங்கி கொள்வேன்.  ஆடை , ஆபரணம், ஒப்பனை என்று பலரும் பைத்தியமாய் இருக்க நீ இந்த காலணிகள் மீது பைத்தியமாய் இருக்கிறாயே என்று என் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் என்னை கேலி செய்வது வழக்கமான ஒன்று. ஆனாலும் எனக்கு காலணிகள் மீது தனி பிரியம் இருக்கிறது "என்று பிரணீதி சோப்ரா கூறியுள்ளார்.

ALSO READ 20 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியான 10 திரைப்படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More