Home> Movies
Advertisement

Beast Exclusive : மால் செட் - வெளிவராத தகவல்கள்

பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே மாலில் செட் அமைத்து உருவாக்கப் பட்டுள்ளது. அந்த செட் பற்றிய முக்கிய தகவல்கள்.

Beast Exclusive : மால் செட் - வெளிவராத தகவல்கள்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றன.

மேலும் படிக்க | ஏகே-61-ல் அதிரடி மாற்றம்! வலிமை கூட்டணி உடைகிறதா?

இந்தச் சூழலில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. மால் ஒன்றை தீவிரவாதிகள் கைப்பற்றி மக்களை பணையக் கைதிகளாக வைத்திருப்பதும், அதை விஜய் முறியடிப்பதும் என ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் ரா ஏஜெண்ட்டாக விஜய் நடித்திருக்கிறார். இதுவரை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள பீஸ்ட் ட்ரெய்லர் யூட்யூபில் சாதனையை படைத்துள்ளது.  

fallbacks

ஆனால், ட்ரெயலரை பார்த்த ரசிகர்கள் இது மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் போலவும், கூர்கா திரைப்படம் போல் இருப்பதாகவும் கமெண்ட் செய்துவருகின்றனர். அதேசமயம் படத்தில் இடம்பெற்றிருக்கும் மால் செட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் போடப்பட்டிருந்த இந்த மால் செட்டுக்காக 30 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டதாக தற்போது தெரியவந்திருக்கிறது. மேலும் மும்பையிலிருந்து இதற்கெனவே வந்த டீம் ஒன்று ஒரு மாத உழைப்பில் இந்த மால் செட்டினை உருவாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | 4 கார் இருக்கும்போது சைக்கிள்ல போனது ஏன்?- விஜய் பதில்?!

இந்த செட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த படத்தின் கலை இயக்குநரான டி.ஆர்.கே. கிரணுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இவர் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்திலும் கலை இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

fallbacks

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More