Home> Movies
Advertisement

‘எதிர்நீச்சல்’ மாரிமுத்துவுக்கு எதிராக போலீஸில் புகார்..! சீரியலுக்கு பாதிப்பா..?

Police Complaint Aginst Ethirneechal Marimuthu: பிரபல நடிகர் மாரிமுத்துவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

‘எதிர்நீச்சல்’ மாரிமுத்துவுக்கு எதிராக போலீஸில் புகார்..! சீரியலுக்கு பாதிப்பா..?

எதிர்நீச்சல் தொடர் நடிகர் மாரிமுத்துவுக்கு எதிராக, காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ஜோதிடர்கள் கூட்டாக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து:

சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொடராக இருப்பது, எதிர்நீச்சல். நடிகரும் இயக்குநரமான திருச்செல்வன் இந்த தாெடரை இயக்கி வருகிறார். இதில், ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர், மாரி முத்து. “ஏய் இந்தாம்மா..ஜனனி..” எனும் இவரது வசனம் மிகவும் பிரபலம். பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நெகடிவ் ராேல்களிலும் நடித்திருந்தாலும் இவர் எதிர்நீச்சல் தொடரால் மட்டுமே பலரால் அறியப்பட்டார். தற்போது இவர் மீது ஜோதிடர்கள் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ‘எதிர்நீச்சல்’ தாெடரில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்..? இதோ முழு விவரம்..!

ஜோதிடர்களை சாடிய மாரிமுத்து..!

சில தினங்களுக்கு முன்னர், மாரி முத்து ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதில் ஜோதிடர்களுக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது. இதில், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஆதரவாக மாரிமுத்து பேசியிருந்தார். அப்போது, ஜோதிடர்கள்தான் இருப்பதிலேயே மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என்றும் இவர்களால்தான் நாடு இன்னும் பின் தங்கி இருக்கிறது என்றும் காரசாரமாக பேசினார். இதனால் கோபமடைந்த ஜோதிடர்கள் இவருக்கு எதிராக அரங்கிலேயே சண்டை போட்டனர். இருப்பினும், இவர் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் தெரியாமல் விழித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாரி முத்து பேசிய வீடியோக்கள் மட்டும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருந்தன. 

காவல் நிலையத்தில் புகார்!

விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து பேசியதே அதன் பிறகு பெரும் விவாதமாக மாறியது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஜோதிடர், நடிகர் மாரிமுத்துவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பியிருக்கிரார். இதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னர் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக வந்து மாரிமுத்துவின் மீது புகார் கொடுத்துள்ளனர். 

அவர்கள் புகார் கொடுக்க வந்த போது திருச்செங்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. ஜோதிடர்களின் புகாரை வாங்கிக்கொண்டு அந்த காவல் நிலையத்தின் உயர் அதிகாரி மகேந்திரன் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து ஜோதிடர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

சீரியலுக்கு பாதிப்பா..?

எதிர்நீச்சல் சீரியல், சின்னத்திரை ரசிகர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது, அதிலும், அத்தொடரின் ஹீரோவை விட, நெகடிவ் கதாப்பாத்திரத்தில் வரும் ஆதி குணசேகரனுக்குதான்  (மாரி முத்து) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர் ஒரு எபிசோடில் வரவில்லை என்றாலும் தங்களுக்கு மிகவும் போர் அடிப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர் இல்லாமல் ஷூடிங்கே தொடங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், மாரிமுத்து மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலை வந்தால், அவரால் சீரியலில் சில நாட்கள் நடிக்க முடியாமல் போய்விடும். இதனால், சீரியலுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என சின்னத்திரையினர் பயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஹீரோவை விட அதிக சம்பளம்..!

நடிகர மாரி முத்துதான், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரை விடவும் அதிகமாக சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடரின் நாயகி உள்பட பலருக்கு, ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகவும், ஆதி குணசேகரனாக வரும் மாரிமுத்துவிற்கு 15,000 ரூபாய் வரை ஒரு நாளைக்கு சம்பளம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | மணிரத்னம் வீட்ல விசேஷம்..! ஒன்று கூடிய கோலிவுட் இயக்குநர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More