Home> Movies
Advertisement

சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.   

சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?

சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.  இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா என்ற இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

fallbacks

முதல் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, G.V.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியிருந்தனர்.  இரண்டாவது பாடலை யுகபாரதி எழுத பிரதீப்குமார், வந்தனிசம்,  பிருந்தாமாணிக்கவாசகன் என 3 பாடகர்கள் பாடியிருந்தனர். உள்ளம் உருகுதய்யா பாடலில் சூர்யாவின் கடவுள் போன்ற கெட்ட அனைவரையும் கவர்ந்தது.  அவரது சிறுவயது புகைப்படத்தையும் இந்தப் புகைப்படத்தையும் இணைத்து சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர்.  ஏற்கனவே பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டிருந்தது.  

 

இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.  தன்னுடைய படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி வந்த சிவகார்த்திகேயன் தற்போது சூர்யாவின் இந்த பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளார்.  சும்மா சுர்ருன்னு எனத் தொடங்கும் இந்த பாடல் முதல் முறை கேட்ட உடனேயே பிடித்து விடும் அளவிற்கு உள்ளது.  இதற்கு முன் இப்படத்தில் இருந்து வெளிவந்த புகைப்படங்களில் சூர்யா நீண்ட முடியுடன் காணப்பட்டார்.  ஆனால் இந்தப் பாடலில் வேறு விதமான கெட்டப்பில் காணப்படுகிறார்.  அடுத்தபடியாக இப்படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர்.

ALSO READ | ’எதற்கும் துணிந்தவன்’ டீமில் இணைந்த சிவகார்த்திகேயன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More