Home> Movies
Advertisement

Etharkkum Thunindhavan: வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது லுக்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 

Etharkkum Thunindhavan: வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது லுக்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஓவரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 

இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த (Suriya 40) படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்க்கு எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) என்று அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழு அறிவித்தது. தற்போது இந்தப் படத்தில் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ALSO READ | First Look #எதற்கும்துணிந்தவன்! வெளியானது சூர்யா 40  படத்தின் பர்ஸ்ட் லுக்!

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.

 

 

இயக்குனர் பாண்டிராஜ் திரைப்படத்தை முடித்தவுடன், அடுத்து வெற்றிமாறன் இயக்கம் "வாடிவாசல்" படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு அதன் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி "வாடிவாசல்" திரைப்படத்தின் டைடில் லுக் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More