Home> Movies
Advertisement

வெளியானது விஸ்வாசம் அஜித்-ன் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ....

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் "அடிச்சுத் தூக்கு" வெளியானது...  

வெளியானது விஸ்வாசம் அஜித்-ன் அடிச்சுத் தூக்கு பாடல் வீடியோ....

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் "அடிச்சுத் தூக்கு" வெளியானது...  

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கூடுதலாக படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

படத்தின் முதல் பாடலுக்காக காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அடிச்சுத் தூக்கு என்ற முதல் பாடலின் தலைப்பை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது முழுப் பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

Read More