Home> Movies
Advertisement

சினிமாவுக்கு வெளியே இந்த நடிகைகள் செய்யும் பிசினஸ்கள் என்னென்ன தெரியுமா?!

பிரபல நடிகைகள் சினிமாவுக்கு வெளியே என்ன மாதிரியான பிசினஸ்களையெல்லாம் செய்கின்றனர், யார் யாருக்கு என்னென்ன தொழில்கள் என விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.

சினிமாவுக்கு வெளியே இந்த நடிகைகள் செய்யும் பிசினஸ்கள் என்னென்ன தெரியுமா?!

நடிகைகள் பலர்  திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி சினிமாவுக்கு வெளியே வேறு சில பிஸ்னஸ்களையும் செய்துவருகின்றனர். அந்த வகையில் யார் யார் என்னென்ன தொழில்களைச் செய்துவருகிறார்கள் என தற்போது பார்க்கலாம்.

தமன்னா

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்துவிட்ட தமன்னா, பல மொழிகளில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல்,  ஆன்லைன் நகை விற்பனையும் செய்துவருகிறார். அந்த வகையில் Wite n Gold என்ற பிராண்டைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவருகிறார் தமன்னா.

fallbacks

நயன்தாரா

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாரா ஒரு தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார். அது தவிர தி லிப் பாம் எனும் காஸ்மெடிக் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம். உலக அளவில் பிரபலமான பல லிப்ஸ்டிக் தயாரிப்புகள் இதில் கிடைக்குமாம். இது மட்டுமல்லாமல் சாய் வாலே எனும் ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் முதலீட்டாளராக உள்ளார் நயன்தாரா.

fallbacks

சமந்தா

தமிழ் தெலுங்கு என பிஸி நடிகையாக இருந்துவரும் சமந்தா, ஆடை நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். பெண்களுக்கான பிரத்யேகமான ஆன்லைன் வர்த்தக ஆடை நிறுவனமான இதற்கு சாகி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தவிர சஸ்டைன்கார்ட் எனும் நிறுவனத்திலும் அவர் முதலீட்டாளராக இருந்துவருகிறார்.

fallbacks

காஜல் அகர்வால்

பிஸியான நடிகையாக இருந்துவந்த காஜல் அகர்வால், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், தற்போது அவரது கணவருடன் இணைந்து வணிகத்தைக் கவனித்து வருவதுடன், நகைக் கடை ஒன்றையும் நடத்திவருகிறாராம் காஜல். அதில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் ஒரு பார்ட்னராம்.

fallbacks

அமலா பால் 

தமிழில் தற்போது பெரிதாகத் தலைகாட்டாமல் இருந்துவரும் நடிகை அமலா பால் கொச்சியில் தனக்கு என சொந்தமாக யோகா ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறாராம். அந்த ஸ்டுடியோவில் அவர் செய்யும் யோகா வீடியோக்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் அவர் ஷேர் செய்துவருகிறார். அத்துடன் ஹெல்த் ட்ரிங் நிறுவனம் ஒன்றையும் அவர் சொந்தமாக நடத்திவருகிறாராம்.

fallbacks

பிரணிதா

அருள்நிதி நடித்த உதயன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆன பிரணிதா, தற்போது பெங்களூருவில் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்திவருகிறார். பெங்களூரு மட்டுமல்லாது சென்னை மற்றும் ஐதராபாத்தில் அதன் கிளைகளைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளார் பிரணிதா. படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்ட பிரணிதாவுக்கு தமிழில் படம் வந்தே சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன.

fallbacks

மேலும் படிக்க | ‘ராஜா கைய வச்சா அது strange-ஆ போனதில்ல..’ - வைரலாகும் மிரட்டலான Stranger Things தீம்!
ரகுல் ப்ரீத் சிங்

நடிகை  ரகுல் ப்ரீத் சிங்கைப் பொறுத்தவரை சினிமாவுடன் தொடர்புடைய வித்யாசமான பிஸ்னஸ் ஒன்றை நடத்தி வருகிறார். ஸ்டாரிங் யூ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகர்களையும் நடிகர்களைத் தேடும் தயாரிப்பாளர்களையும் ஒன்றாக இணைக்கும் பாலமாக இயங்கிவருகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடுவதை எளிமையாக்கும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளதாம்.

fallbacks

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுற்றிச் சுழன்று நடித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் பிஸ்னஸ்சில் ஈடுபட்டுவருகிறார். அதன்படி, ஸ்கின்கேர் ஸ்டார்ட் அப் பிராண்ட் ஒன்றை நடத்திவருகிறார் கீர்த்தி. கடந்த 2021இல் தொடங்கப்பட்ட இது பூமித்ரா எனும் பெயரில் இயங்கிவருகிறது.

fallbacks

மேலும் படிக்க | தவிர்க்க முடியாத தனிப் பெருங்கலைஞன்- # HBD கவுண்டமணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More