Home> Movies
Advertisement

பாகுபலி 2 படத்த வாங்க ஆள் இல்லையா?

பாகுபலி 2 படத்த வாங்க ஆள் இல்லையா?

பாகுபலி முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து அதன் 2-ம் பாகத்திற்காக மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாகுபலி 2 படத்தின் விநியோகம் மிக ஜோராக நடந்து வருகிறது. ஆனால் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வாங்க ஆளில்லாத சூழல் நிலவுகிறது.

அதாவது கர்நாடகா பட்ஜெட்டின் போது, சினிமா டிக்கெட் விலை அதிகபட்சம் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து பாகுபலி 2ம் பாக படத்தை வாங்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வரவில்லை.

இதனால் கர்நாடகாவில் மட்டும் இதுவரை பாகுபலி படம் விற்பனையாகாமல் உள்ளது.

Read More