Home> Movies
Advertisement

அதிரவைக்கும் திருப்பங்களுடன், பரபரப்புக்கும் வேகத்தில் ‘ஹார்ட் பீட்’ சீரிஸ்!

Heart Beat Series Tamil : டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  'ஹார்ட் பீட்' தொடர், மார்ச் 8ஆம் தேதி முதல், வாராவாரம் வெள்ளிக்கிழமையில் நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.   

அதிரவைக்கும் திருப்பங்களுடன், பரபரப்புக்கும் வேகத்தில் ‘ஹார்ட் பீட்’ சீரிஸ்!

Heart Beat Series Tamil : ஆரம்பத்தில் ஹாலிவுட் தொடர்களைத்தான் நம்ம ஊர் சினிமா விரும்பிகள் ஆவலுடன் பார்த்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மொழியிலேயே பல தொடர்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. இவை பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருப்பதால் பலர் தமிழ் மொழி தொடர்களை விரும்பி கண்டுகளித்து வருகின்றனர். அந்த லிஸ்டில், புதிதாக இணைந்துள்ள தொடர்தான், ஹார்ட் பீட்.

ஒரு மருத்துவமனையில் ரதி எனும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, அங்கு சந்திக்கும் பிரச்சனைகளும், அவளது வாழ்வில் ஏற்படும் அனுபவங்களும் தான் இக்கதையின் மையம். 

ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக,  ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கி வருகிறது இந்த சீரிஸ். 

fallbacks

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில்,  நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில், ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும், ரசிகர்கள் எதிர்பாராத அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆச்சரியமான டிவிஸ்ட், அடுத்த வார எபிஸோடை நோக்கி,  ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 

மேலும் படிக்க | Vijay : விஜய்யின் காரை அப்பளம் போல் அடித்து நொறுக்கிய கேரள ரசிகர்கள்! வைரல் வீடியோ..

இனி என்ன நடக்கும், உண்மை தெரிய வரும்போது ரதி என்ன செய்வார்?, ஏன் ரதி ரீனாவை ஒதுக்கி வைத்தார். ரதியின் குடும்பத்தில் ரீனா இணைவாரா ? இந்த கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள, ஒவ்வொரு வாரமும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் 'ஹார்ட் பீட்' சீரிஸை தவறாமல் பாருங்கள். 

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | Silk Smitha : சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்! பிரபல நடிகை கூறிய பரபரப்பு பேச்சு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More