Home> Movies
Advertisement

‘சங்கமித்ரா’: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி!

‘சங்கமித்ரா’: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி!

வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு சுந்தர்.சி இயக்கும் படம் தான் ‘சங்கமித்ரா’. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் ஜெயம் ரவியும் ஆர்யாவும் ஒப்பந்தமாகினர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, அறிமுக விழாவில் கலந்துகொள்ள கேன்ஸ் வரை சென்ற ஸ்ருதிஹாசன், படத்திலிருந்து விலகினார். முழுமையான ஸ்க்ரிப்ட் மற்றும் படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்ய வில்லை என்ற காரணத்தால் ஸ்ருதி இப்படத்திலிருந்து விலகலுக்குக் காரணம் என்று அவரது வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதனால், ’சங்கமித்ரா’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக 'எம்.எஸ்.தோனி' படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஐதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read More