Home> Movies
Advertisement

சூர்யாவின் ’அருவா’ படத்தின் அப்டேட் - ஹரியின் சூடான பதில்

சூர்யாவின் ’அருவா’ படம் டிராப் குறித்து இயக்குநர் ஹிரி முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூர்யாவின் ’அருவா’ படத்தின் அப்டேட் - ஹரியின் சூடான பதில்

அருண் விஜய் நடிப்பில் யானை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ஹரியிடம், சூர்யா நடிப்பில் அறிவிக்கப்பட்ட ‘அருவா’ படத்தின் அப்டேட்டை கேட்டனர். 

fallbacks

ஏற்கனவே படம் அறிவிக்கப்பட்டு எந்த சத்தமும் இல்லாமல் இருப்பதால் படம் டிராப் ஆனதா? அல்லது மீண்டும் தொடங்க வாய்ப்புகள் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.இந்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ஹரி, படம் சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தை தொடங்க தான் எப்போது வேண்டுமானாலும் தயாராக இருப்பதாகவும் கூறினார். சிங்கம், வேல் உள்ளிட்ட அடுத்தடுத்து அதிரடி படங்களைக் கொடுத்த சூர்யா மற்றும் ஹரி கூட்டணி கடைசியாக ’அருவா’ படத்தில் சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிப்பதாக அறிவிப்பும் வெளியானது.

fallbacks

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு... 'மாநாடு' படத்தை 100 கோடி வசூல் லிஸ்ட்டுல போடு!

ஆனால், படம் திட்டமிட்டப்படி தொடங்கவில்லை. சூர்யா மற்றும் ஹரி இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக படம் டிராப் ஆனது என்றும் தகவல் வெளியானது. சூர்யா இப்போது பாலாவுடன் சூர்யா 41 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடி வாசல்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த இரு படங்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. 

மேலும் படிக்க | ரூல்ஸ் மீறப்படும்... விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் பெயர் என்ன?.. வெளியானது அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More