Home> Movies
Advertisement

இயக்குநர் பாலாவுக்கு விவாகரத்தா! காரணம் இதுதான்..

இயக்குனர் பாலாவும் அவரது மனைவி முத்துமலரும் மார்ச் -5ம் தேதி விவாகரத்து செய்து தங்களது 17 வருட உறவை முறித்துகொண்டுள்ளனர்.     

இயக்குநர் பாலாவுக்கு விவாகரத்தா! காரணம் இதுதான்..

கடந்த சில காலங்களாகவே திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் அவர்களது மண வாழ்க்கையை முறித்துக்கொண்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.  சில மாதங்களுக்கு முன்னர் ஹாட் டாப்பிக்காக இருந்தது சமந்தா - நாக சைதன்யா மணமுறிவு, அடுத்ததாக தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு, தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பாலாவும் தனது 17 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.  தமிழில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாலா, தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் பல்வேறு வெற்றிப்படங்களை இவர் கொடுத்துள்ளார்.

fallbacks

மேலும் படிக்க | நடிகர் விஜய் 7 ஆண்டுகள் மனைவியை பிரிந்திருந்தாரா? ஒரு ரசிகனின் குரல்

தற்போது இவரின் விவாகரத்து செய்தி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இயக்குனர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த ஜூலை 5, 2004 அன்று மதுரையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.  இவர்களுக்கு பிரார்த்தனா என்கிற பெண் குழந்தை உள்ளது. 17 வருட மணவாழ்க்கைக்கு பிறகு, அவர்கள் அதை விட்டு தற்போது வெளியேற முடிவு செய்துள்ளனர்.  இயக்குனர் பாலாவுக்கும் அவரது மனைவி மலருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாகவே ஒருவரைவிட்டு ஒருவர் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.  இயக்குனர் அவரது படம் சம்மந்தப்பட்ட வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, ​​அவரது மனைவி மலர் அடிக்கடி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பாடகி சைந்தவி மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சிலருடன் தனது நேரத்தை செலவழித்து கொண்டிருந்தார். 

fallbacks

இதனையடுத்து இருவருக்கும் முறைப்படி அவர்களது உறவை முறித்துக்கொள்ள விரும்பினர், இந்தியனையடுத்து பரஸ்பரமாக பிரிய நினைத்த இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.  இதனையடுத்து இருவரும் மார்ச்-5ம் தேதி முறைப்படி விவாகரத்து செய்துகொண்டு அவர்களது 17 வருட மண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளனர்.  இவர்களின் விவாகரத்து செய்தி தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

மேலும் படிக்க | சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்யவதாக அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More