Home> Movies
Advertisement

என்னது இந்தியன் படத்துல கமலுக்கு டப்பிங் கொடுத்தது SPB ஆ? வீடியோவை பாருங்கள்

SPB Dubbed For Kamal Haasan : இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னது இந்தியன் படத்துல கமலுக்கு டப்பிங் கொடுத்தது SPB ஆ? வீடியோவை பாருங்கள்

SPB Dubbed For Kamal Haasan : ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலுகாசனுக்கு மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் குரல் கொடுத்திருக்கும் தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1996 ஆண்டின் இந்தியன் :
ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் அடுத்த பாகம் தான் 28 ஆண்டுகள் கழித்து வருகிற 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில், கமல்ஹாசன் தந்தை சேனாபதியாகவும் மகன் சந்துரு கதாப்பாத்திரமாகவும் நடித்திருந்தார். படத்தின் இறுதியில், தன் மகனை தானே கொள்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் முயற்சியிலும் இறங்கினார் ஷங்கர். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் 2 (Indian 2 Movie Update) படத்தின் பணிகள் ஒருவழியாக நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்தியன் 2 அப்டேட்:
இந்த படத்திலும் கமல்ஹாசன் (Kamal Haasan) சேனாபதி எனும் தாத்தா கமல் பாத்திரத்திலேயே நடிக்கிறார். இதில் நடித்து வந்த நடிகர்கள் விவேக், மயில்சாமி, மனோபாலா, நெடுமுடி வேணு விட்ட போல படப்பிடிப்பின் பாதியிலேயே உயிரிழந்து விட்டனர். இதனாலும் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. இதனுடன் இந்த படத்தில் சித்தார்த் (Siddharth), பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, ஜெகன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திருமணமாகி 15 நாட்களில் கர்ப்பம்!? அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட நடிகை..

இசை வெளியீடு:
இதனிடைதே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. அப்போது படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு சில தினங்களுக்கு முன் ‘இந்தியன் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

எஸ்பிபி குரலில் கமல்ஹாசன்:
இந்நிலையில் தற்போது இந்தியன் முதல் பாகத்தில் கமல்காசனுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் பதிவு தகவல் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்தியன் படத்தில் இரண்டு இடங்களில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்துள்ள வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. இது நாள் வரைக்கும் இது பலரும் அறிந்திராத ஒன்றுதான். கமல் இல்லாததனால் தான் எஸ்பிபி வைத்து டப்பிங் செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சூர்யா நடிக்க இருந்த படம்..ஜீவா நடித்து Flop ஆனது! எந்த படம் தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More