Home> Movies
Advertisement

'துருவ நட்சத்திரம்' பர்ஸ்ட் லுக்..!!

'துருவ நட்சத்திரம்' பர்ஸ்ட் லுக்..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணி இணைப்பில் 'துருவ நட்சத்திரம்' உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

'துருவ நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் விக்ரமின் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போஸ்டரில் ஆகஸ்ட் மாதம் வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read More