Home> Movies
Advertisement

தர்மதுரை: ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியீடு

தர்மதுரை: ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியீடு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'தர்மதுரை' ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தர்மதுரை'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இறுதிகட்ட பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 'யு' சான்றிதழ் வழங்கியது. இப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

Read More