Home> Movies
Advertisement

‘விஜய்-66’ வில்லன் இவரா!? இவரு லிஸ்ட்லயே இல்லையே!

விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

‘விஜய்-66’ வில்லன் இவரா!? இவரு லிஸ்ட்லயே இல்லையே!

விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம், அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘அரபிக் குத்து’ பாடல், சோசியல் மீடியாவில் தொடர்ந்து ட்ரெண்டிங்காக இருந்துவருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடும் நடக்கவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் இணைகிறார்.

                                                                        fallbacks

வம்சியின் இப்படம் ஓர் அரசியல் படமாக இருக்கும் என முதலில் கூறப்பட்டுவந்தது. ஆனால் அப்பட இயக்குநரோ, இது அரசியல் படம் இல்லை எனவும் தனது ‘தோழா’ உள்ளிட்ட படங்களைப்போல குடும்ப சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். தமன் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளதாகத் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | "தளபதி 66" அரசியல் சார்ந்த படமா? இயக்குனர் வம்சி விளக்கம்!

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு என இருமொழிப்படமாக வெளிவந்த ‘ரக்த சரித்ரா-2’ படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார் விவேக் ஓபராய். அதன் பிறகு சிவா இயக்கத்தில் வந்த ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். அதன்பின்னர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ படத்தில் நடித்த அவர், கன்னடப் படமான ‘ரஸ்டம்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படியாக, இந்தி மட்டுமல்லாது தென்னிந்தியப் படங்களையும் குறிவைத்து விவேக் ஓபராய் காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது விஜய்க்கு வில்லனாகவும் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

                                                                                          fallbacks

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், இந்தியில் டப்பிங் செய்யப்படும் பட்சத்தில், இந்தியில் முகமறிந்த நடிகரான விவேக் ஓபராயும் இதில் இருப்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனப் படக்குழு கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்துடன் இணைந்து நடித்த விவேகத்தில் விவேக் ஓபராயின் கதாபாத்திரத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என படத்தின் ரிலீசுக்குப் பின்னர் சிலர் விமர்சனம் செய்திருந்தனர். அஜித்தின் விவேகத்தில் ‘மிஸ்’ ஆனதை, விஜய்யின் இந்தப் படத்திலாவது விவேக் ஓபராய் பூர்த்தி செய்வாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ ஆடியோ ரிலீஸ்: ரசிகர்களுக்கு 3 சர்ப்ரைஸ்!

 

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More