தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் மக்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
பல வகையான ஆடிஷன் மூலம் மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெகா ஆடிஷன் மூலம் இவர்களில் இருந்து 12 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் படிக்க | கோலிவுட் நாயகிகளின் வீட்டில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
ஏற்கனவே நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் பாடல் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதுவரை நீ யாரோ இனி நீதான் ஹீரோ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Music × Dance
— S J Suryah (@iam_SJSuryah) December 22, 2023
Dance Jodi Dance Reloaded 2 originals is here
The track made for your dancing shoes!
Best wishes to @ZeeTamil and All the Contestants!https://t.co/Mv81xkjhBP@vbrcomposer @VishnuEdavan1 @Jeevan_offl_#DanceJodiDanceReloaded2 #OfficialSong #ZeeTamil
Happy to release the Official Song of Dance Jodi Dance Reloaded
— Raja yuvan (@thisisysr) December 22, 2023
Let’s Vibe to the Rhythm of DJD
Best wishes to @ZeeTamil and all the Contestants https://t.co/2K5xCZjU8L@vbrcomposer @VishnuEdavan1 @Jeevan_offl #DanceJodiDanceReloaded2 #OfficialSong #ZeeTamil
இந்த பாடலை நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | காதலியுடன் டூர் சென்றுள்ள நடிகர் விஷால்? வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ