Home> Movies
Advertisement

காப்பதும் நான் தான்.. அழிப்பதும் நான் தான்.. “தபங்” 3 படத்தின் டிரெய்லர்

சல்மான் கானின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான தபாங் 3 படத்தின் டிரெய்லர் (Dabang 3 Trailer) இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காப்பதும் நான் தான்.. அழிப்பதும் நான் தான்.. “தபங்” 3 படத்தின் டிரெய்லர்

புதுடெல்லி: சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான தபாங் 3 படத்தின் டிரெய்லர் (Dabang 3 Trailer) வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட் படமான தபங், தபங் 2 மிகப்பெரிய ஹிட்டானதை அடுத்து, அதன் தொடர்ச்சியாக, அந்த படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், தபங் 3 படத்தை நடிகரும், நடன மாஸ்டருமான பிரபுதேவா (Prabhu Deva) இயக்குகிறார். டிரெய்லரின் தொடக்கத்தில் சுல்புல் பாண்டே (Chulbul Panday) கதாபாத்திரத்தில் சல்மான் கான் (Salman khan) கம்பீரமான தோற்றத்தில் காணப்படுகிறார். அதன் பிறகு நடிகை சோனாக்ஷியுடனான காதல் காட்சிகளை காட்டுகிறார்கள். இதற்குப் பிறகு, டிரெய்லர் உங்களை சற்று ஆச்சரியப்படுத்தக்கூடும். ஏனென்றால் சோனாக்ஷியைத் தவிர வேறு ஒரு நடிகையின் முகத்தை நீங்கள் காண்பீர்கள். இந்த நடிகை சாய் மஞ்ச்ரேகர், இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ட்ரெய்லரைப் பார்த்தால், முந்தைய இரண்டு படங்களைப் போலவே, தபங் தொடரின் இந்த படமும் பார்வையாளர்களை மகிழ்விக்க மசாலா நிறைந்த கமர்சியல் படமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

சல்மான் ஹீரோவாக நடிக்கும் தபாங் 3 படத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தபங் 3 டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும். தபங் 3 படத்திற்காக சல்மான் கான் உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்தில் கர்நாடகாவை சேர்ந்த கிச்சா சுதீப் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில், கிச்சா சுதீப்பின் கதாபாத்திரத்திற்கு பாலி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு "வாண்டட்" படத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருந்தார். சுமார் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபுதேவா மற்றும் சல்மான் கான் இணைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

 

Read More