Home> Movies
Advertisement

காமிக்ஸ் உலகின் தந்தை ஸ்டான் லீ 95-வது வயதில் மரணம்!

காமிக்ஸ் உலகின் தந்தை ஸ்டான் லீ 95-வது வயதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார்!

காமிக்ஸ் உலகின் தந்தை ஸ்டான் லீ 95-வது வயதில் மரணம்!

காமிக்ஸ் உலகின் தந்தை ஸ்டான் லீ 95-வது வயதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார்!

ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மேலும் பல காமிக் கதாப்பாத்திரங்களை உருவாவதற்கு காரணமானவர் ஸ்டான் லீ. மார்வல் காமிஸ் நிறுவனதின் இணை நிறுவனரான இவர் தனது 95-வது வயதில் திங்கள் காலை(உள்ளூர் நேரப்படி) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானதாக அவரது மகள் குவாட்டினிங் லீ தெரிவித்துள்ளார்.

1922-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த இவர் 1939-ஆம் ஆண்டு 'டைம்லி காமிக்ஸ்' என்ற நிறுவனத்தில் அலுவலக பணியாளாக பணிக்கு சேர்ந்தார். ஸ்டான் லீ. ஸ்டான் லீயின் கடின உழைப்பை கண்ட அந்நிறுவனம் அவரது 19-வது வயதில் அவருக்கு சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அளித்துள்ளது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஸ்டான் லீ பின்னர் பல காமிக்ஸ்களை எழுதி உலக புகழ் பெற்றுள்ளார்.

ஸ்டான் லீ உருவாக்கிய கதாபாத்திரங்கள் உலகளவில் பலரது பிடித்தமான கதாபாத்திரங்களாக உள்ளன. மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் திரைப்படங்களாக உருவான பிறகு அனைத்து திரைப்படங்களிலும் ஸ்டான் லீ சிறப்பு தோற்றத்தில் தோன்றுவதற்கு மறக்கவில்லை. அதன்படி கடைசியாக வெளியான Venom திரைப்படத்தில் நடித்திருந்தார். 

95 வயாதாகும் ஸ்டான் லீ-யின் மனைவி ஜோனா கடந்த 2017-ஆம் ஆண்டு இறந்ததை அடுத்து தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடங்களாக உடல்நல குறைவால் தவித்து வந்த ஸ்டான் லீ அமெரிக்காவில் காலமானார்.

Read More