Home> Movies
Advertisement

கொரனோ பாதிப்பு: நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்திரை உலகை சேர்ந்த டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வரை நிதியுதவி அளித்துள்ளார்.

கொரனோ பாதிப்பு: நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனையை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கு உத்தரவின் 16வது நாளாகும். ஒருபக்கம் மத்திய, மாநில அரசுகள் பல நவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுபுறம் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. 

மேலும் நாட்டில் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த அனைவரும் முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியும், மாநில முதல்வர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகளுக்கு பல தரப்பில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

சாதரண மக்கள் தொடங்கி டாடா, ரிலையன்ஸ் என பெரிய தொழில் அதிபர்கள் நிவாரண உதவி அளித்தனர் அதில் பல திரையுலக பிரபலங்களும் லட்சம் முதல் கோடி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்தனர். 

இந்த நிலையில் தமிழகத்திரை உலகை சேர்ந்த டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வரை நிதியுதவி அளித்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம்,  பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் எனது மாற்றுதிறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.

அதுக்குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியதாவது, 

ஹாய் நண்பர்களே, ரசிகர்களே, உங்கள் அனைவருடனும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது அடுத்த திட்டங்களில் ஒன்று எனது தலைவரின் திரைப்படம் சந்திரமுகி 2, தலைவரின் அனுமதியுடனும் ஆசீர்வாதங்களுடனும் இந்த படத்தில் நடிக்க உள்ளேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த படத்தை பி. வாசு சார் இயக்குவது எனக்கு ஆசீர்வாதம் மற்றும் எனது அதிர்ஷ்ட இந்த படத்தை சன் பிக்சர் கலாநிதி மாறன் சார் தயாரிக்கிறார். 

இந்த படத்துக்காக முன்கூட்டியே நான் பணம் பெற்றுக்கொண்டேன். அதன்மூலம் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு எனது 3 கோடி ரூபாய் பங்களிப்பதாக தாழ்மையுடன் உறுதியளிக்கிறேன்.

பிரதமர் - கேர்ஸ் நிதிக்கு 50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு (தமிழகம்) 50 லட்சம், ஃபெப்சி யூனியனுக்கு 50 லட்சம் மற்றும் எனது நடனக் கழகத்திற்கு 50 லட்சம் மற்றும் எனது மாற்றுதிறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளிக்கிறேன். 

அதுமட்டுமுல்லாமல் எனது பிறந்த இடமான ராயபுரத்தில் உள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க ரூ. 75 லட்சம் வழங்குகிறேன். இது சரியான பாதுகாப்போடு காவல்துறையின் உதவியுடன் வழங்கப்படும். "மக்களுக்கு சேவை செய்வதே கடவுளுக்கு சேவை செய்து" எனக் கூறியுள்ளார்.

 

Read More