Home> Movies
Advertisement

குக் வித் கோமாளி: பட்டத்தை வென்றவருக்கு இத்தனை லட்சம் பரிசுத்தொகையா?

Cooku With Comali Season 4: குக் வித் கோமாளியின் 4ஆவது சீசன் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்தும், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்துமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக் வித் கோமாளி: பட்டத்தை வென்றவருக்கு இத்தனை லட்சம் பரிசுத்தொகையா?

Cooku With Comali Season 4 Final: குக் வித் கோமாளி தொடர் தான் தற்போது ரியாலிட்டி ஷோவில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது என சொல்லப்படுகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளிகளிலும் கூட குக் வித் கோமாளி குறித்த பேச்சுகள் தான் எங்கும் நிறைந்திருக்கின்றன. 

கல்யாண வீடு முதல் காதலர்களின் சேட்டிங் வரை எல்லா இடத்திலும் டாபிக் 'இந்த வாரம் குக் வித் கோமாளி எபிசோட் பாத்திங்களா' என்பதாகவே இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்த சமையல் - நகைச்சுவை - பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கின்றனர். 

மூன்று வெற்றிகரமான சீசன்களுக்கு பிறகு, தற்போது நான்காவது சீசனின் இறுதிச்சுற்று வரும் வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. குக் வித் கோமாளி நான்காவது சீசனில் ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, கல்யாண், விசித்ரா, ஆண்ட்ரியான் நௌரிகட், மைம் கோபி, விஜய் விஷால், கிஷோர் மற்றும் சிவாங்கி என 10 குக்குகள் பங்கேற்றனர். இதில் விசித்ரா, ஸ்ருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் மற்றும் ஆண்ட்ரியானே ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனர். 

மேலும் படிக்க | 'சந்திரமுகி 2' படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி

இந்த இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்தும், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்துமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் மைம் கோபி பட்டத்தை தட்டிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவ்வாறு, மைம் கோபி வெற்றி பெற்றால் குக் வித் கோமாளி தொடரில் பட்டத்தை பெற்ற முதல் ஆண் என்ற பெருமையை அவர் பெறுவார். 

முதல் சீசனில் வனிதா விஜயகுமார் பட்டத்தை பெற்றார். இரண்டாவது சீசனில் இயக்குநர் அகஸ்தியனின் மகளும்,  இயக்குநர் திருவின் மனைவியுமான கனி வெற்றி பெற்றார். இதையடுத்து, கடைசியாக நடைபெற்ற மூன்றாவது சீசனில் நடிகை ஷ்ருதிகா பட்டத்தை வென்றார், இவர் பிரபல பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஆவார். இதனால், கடைசி மூன்று சீசனிலும் பெண்களே பட்டத்தை வென்ற நிலையில், முதல் முறையாக ஒரு ஆண் போட்டியாளராக மைம் கோபி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும், ஸ்ருஷ்டி டாங்கே இரண்டாவது இடத்தையும், விசித்ரா மூன்ராவது இடத்தையும் பிடித்தாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, முதல் முறையாக வெற்றியாளருக்கு ரூ. 10 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ. 5 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, மைம் கோபி ரூ. 10 லட்சத்தையும், ஷ்ருதிகா ரூ. 5 லட்சத்தையும் கைப்பற்றியதாகவும் கூறப்படுகின்றன. இருப்பினும், இதனை யாரும் உறுதிசெய்யாத நிலையில், வரும் ஞாயிற்றுகிழமை வரை இதனை அறிந்துகொள்ள காத்திருக்க வேண்டும். 

மேலும் படிக்க | ‘விடுதலை 2’ அப்டேட்: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More