Home> Movies
Advertisement

சலார் படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்! யார் தெரியுமா?

நடிகர் பிரபாஸ் ஹீராேவாக நடிக்கும் சலார் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஒருவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.   

சலார் படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்! யார் தெரியுமா?

கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம், சலார். இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தமிழ் நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் வருகின்றனர். அதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகரும் ஒருவர். சலார் படத்தில் நடிக்கும் தமிழ் நடிகர்கள் யார் யார்? 

சலார் திரைப்படம்..

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தென்னிந்திய சினிமாவில் இருந்து அவ்வப்போது படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அப்படி வெளியாகி வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று, கே.ஜி.எஃப். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதன் மூன்றாம் பாகத்திற்கான கதை பணிகளும் உருவாகி வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் படம், சலார். 

சலார் படத்தில் இடம் பெற்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம்..!

தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகும் பலர், பின்னாளில் பெரிய திரையிலும் ஜொலிக்கின்றனர். அப்படி, அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிளுள் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் கடைசி சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர், மைம் கோபி. இவர், பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்திருக்கிறார். இந்தநிலையில், இவருக்கு சலார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | நானியின் ‘ஹாய் நான்னா’ படத்தை பார்க்கலாமா? ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

fallbacks

முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள்..!

கடந்த சில ஆண்டுகளாக சினிமா உலகம், நவீன உலகுடன் இணைந்து பெரிதாக வளர்ந்து வருகிறது. பாலிவுட், கோலிவுட் திரையுலகில் பெரிய நட்சத்திரமாக திகழ்பவர்கள் கூட இப்போது பெரிய படங்களில் ஒன்றிணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில், சலார் படத்திலும் தமிழ் நடிகர்கள் சிலர் முக்கிய கதாப்பாத்திரங்களாக முகம் காட்டியுள்ளனர். அதில் முக்கியமானவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் சரியாக பட வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்ற இவர் அங்கு பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான் சலார். இப்படத்தில் அவர்தான் கதாநாயகி. 

இவரைத்தவிர, பாபி சிம்ஹா மற்றும் ஜான் விஜய் ஆகியோரும் சலார் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். மலையாள நடிகர் பிருத்வி ராஜ், சலார் படத்தில் வில்லனாக வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் அளவிற்கு இவருக்கும் முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. 

சலார்-கே.ஜி.எஃப் யுனிவர்ஸ்:

சலார் படத்திற்கும் கே.ஜி.எஃப் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. அதை உருதிப்படுத்தும் வகையில் படத்தின் டிரைலரிலும் கே.ஜி.எஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு சிலர் வந்திருந்தனர். இதனால், இப்படம் அந்த யுனிவர்ஸில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு எதையும் படக்குழுவினர் வெளியிட வில்லை. இதை அவர்கள் ரசிகர்களுக்காக சர்ப்ரைஸாக வைத்திருப்பர் என ரசிரக்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு! நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More