Home> Movies
Advertisement

தாடி பாலாஜி மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார்

தாடி பாலாஜி மீது அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வருபவரும், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் தாடி பாலாஜி(வயது 43) மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தாடி பாலாஜி சென்னை மாதவரம் சாஸ்திரி நகரில் வசிக்கிறார். இவருக்கு நித்யா (வயது 30) என்ற மனைவி உள்ளார். இருவரும் 8 ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு போர்ஷிகா(வயது 6) என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், தனது கணவர் பாலாஜி அவர்கள் தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் மனைவி நித்யா மாதவரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

இதுபற்றி மாதவரம் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More