Home> Movies
Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகம் எப்போதும் நகைச்சுவை நடிகர்களை ஊக்குவித்து அவர்களை ஹீரோக்களாக உயர்த்த தவறியதில்லை. அந்த வகையில்  நாகேஷ், சந்திர பாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், யோகி பாபு ஆகியோரை கதாநாயகர்களாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த வரிசையில் தற்போது நடிகர் சூரியும் இணையவுள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள நகைச்சுவை திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

விணனைத்தாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களை RS Infotainment நிறுவனம் சார்பில் தயாரித்த எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது, 'வெக்கய்' நாவலை அடிப்படையாகக் கொண்ட தனுஷின் கிராமப்புற அதிரடி நாடக அசுரனின் கடைசி அட்டவணையில் இயக்குனர் பிஸியாக இருக்கிறார். கலைபுலி எஸ் தானு தயாரித்த இப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வேலைகள் முடிந்த பின்னர் சூரி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.

Read More