Home> Movies
Advertisement

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைக் கண்டுகளித்த முதலமைச்சர்- வைரல் புகைப்படங்கள்!

 நெஞ்சுக்கு நீதி வருகிற 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் முதலமைச்சர் இப்படத்தைக் கண்டுகளித்துள்ளார்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைக் கண்டுகளித்த முதலமைச்சர்- வைரல் புகைப்படங்கள்!

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக நெஞ்சுக்கு நீதி எனும் படத்தை இயக்கியுள்ளார். 

உதயநிதி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் உடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. 

இந்தியில் வெளியாகிக் கவனம் பெற்ற ஆர்ட்டிகிள்15 படத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் திரைக்கதையில் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம்.

                   fallbacks

நெஞ்சுக்கு நீதி எனும் இப்படத்தின் தலைப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சுயசரிதைப் புத்தகத்தின் தலைப்பு ஆகும். அதனால் தனது தந்தை மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் அனுமதி பெற்ற பிறகே இப்படத்துக்கு அதைத் தலைப்பாக வைக்க உதயநிதி முடிவு எடுத்தாராம்.

மேலும் படிக்க | VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!

                                                   fallbacks

 

இந்நிலையில் இப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்துள்ளார். சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறப்புத் திரையிடலாக மு.க. ஸ்டாலினுக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

                             fallbacks

மேலும் படிக்க | ‘புஷ்பா-2’ வின் ஓடிடி ரைட்ஸ் யாருக்கு?- முட்டிமோதும் இரு நிறுவனங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More