Home> Movies
Advertisement

4 நாட்களில் இவ்வளவுதான் வசூலா..? சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்..!

Chandramukhi 2 Box Office Collection: சந்திரமுகி 2 படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் என்ன? முழு விவரம் இதோ..!

4 நாட்களில் இவ்வளவுதான் வசூலா..? சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்..!

2005ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. 

சந்திரமுகி 2:

பி.வாசு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம், சந்திரமுகி 2. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார், சந்திரமுகி 2. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த சந்திரமுகி படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் அதே வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜாதான் இந்த படத்திலும் முக்கிய புள்ளிகள். முந்தைய பாகத்தில் கதையை சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடித்தனர். ஆனால் இந்த படமோ முழுக்க முழுக்க பேய்-த்ரில்லர் படமாக உள்ளது. 

பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்:

சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம், சுமார் 80 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு உரவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம், வெளியான முதல் நாளிலேயே 7.5 கோடி ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் வர இருப்பதால் சந்திரமுகி 2 படத்தின் வசூல் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சந்திரமுகி படத்தின் SPOOF-ஹா இந்த சந்திரமுகி 2? திரைவிமர்சனம் இதோ!

தற்போது படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. படம், தற்போது வரை உலகளவில் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்களான இரண்டு நாட்களிலும் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இப்படத்துடன் இணைந்து சித்தா மற்றும் இறைவன் ஆகிய படங்கள் வெளியாகின. இதனாலும் இப்படத்தின் வசூல் பாதிப்படைந்ததாக பேசப்படுகிறது.

படத்தின் விமர்சனம்..

சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது, ரசிகர்கள் பலர் “அந்த சந்திரமுகி அளவிற்கு வராது..” என்று விமர்சனம் தெரிவித்தனர். ஆனால், படம் வெளியான பிறகு பலர் படத்திற்கு நல்ல விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகவும், ராகவா லாரன்ஸை விட இவருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, படத்தில் திகில் காட்சிகள் சிறப்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளதாகவும், லக்‌ஷ்மி மேனன் சந்திரமுகி 2 பேய் புகுந்த கதாப்பாத்திரமாக நன்றாக நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

யாருக்கு என்ன சம்பளம்…? 

சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்குதான் அதிக தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. கங்கனாவிற்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸிற்கு 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. மேலும், இன்னொரு முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ள நடிகர் வடிவேலுவிற்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நாயகிகள் மகிமா நம்பியார், லக்‌ஷ்மி மேனன் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோருக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சந்திரமுகி 2 வசூல் விவரம்: ஒரே நாளில் இத்தனை கோடி கலக்‌ஷனா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More