Home> Movies
Advertisement

‘கில்லர் கில்லர்..’ கேப்டன் மில்லர் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

Captain Miller Trailer: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?   

‘கில்லர் கில்லர்..’ கேப்டன் மில்லர் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

அருண் மாத்தீஸ்வரன் இயக்கியுள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கேப்டன் மில்லர் திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளவர், தனுஷ். இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நிலையில், இவர் அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்த படம்தான், கேப்டன் மில்லர். அருண், ஏற்கனவே ‘சாணி காயிதம்’ என்ற படத்தை எடுத்து பிரபலானவர். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

கேப்டன் மில்லர் டிரைலர்..

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரில், பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு கீழ் கொத்தடிமைகளாக கிராம மக்கள் இருப்பது போலவும், தனுஷ் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுபவர் போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன? 

 

தனுஷின் பழைய கதாப்பாத்திரம்..

தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் அவர் ராணுவ வீரராக வந்து தனது பள்ளி பருவ காலத்தை நினைத்து பார்ப்பார். அந்த படத்தில் இருந்து எடுத்த போட்டோவையும், தற்போதைய கேப்டன் மில்லர் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் அஜித்-த்ரிஷாவின் பெயர் என்ன தெரியுமா?

சிரித்தவர்கள் எங்கே?

முதல் படத்தின் போது தனுஷின் லுக்கை பார்த்து சிரித்தவர்கள் இப்போது எங்கே என கேட்டு, ஒரு ரசிகர் பதிவினை வெளியிட்டிருக்கிறார். 

கில்லர் கில்லர்..

ஒரு ரசிகர், கேப்டன் மில்லர் படத்தின் டிரைலருக்கு ‘கில்லர் கில்லர்’ என விமர்சனம் கொடுத்துள்ளார்.

பட டிரைலரில் நிறைய கொலை காட்சிகள் வருவது இதனை கில்லர் என அழைப்பதற்கு வசதியாக உள்ளது. 

அந்த படம் மாதிரி இருக்கே..

கேப்டன் மில்லர் படத்தில் பல துப்பாக்கி சுடும் காட்சிகளும், கொலை செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதை பார்த்த ஒரு ரசிகர், இது விக்ரம் படம் போல உள்ளதாக கமெண்ட் செய்துள்ளார்.

இதை சில ரசிகர்கள் ஆமோதித்து உள்ளனர். 

மேலும் படிக்க | Vichitra Evicted: ரசிகர்களுக்கு ஷாக்! பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன விசித்ரா..அடுத்தது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More