Home> Movies
Advertisement

‘காதலுக்கு வயது இல்லை’... நம்பவில்லை என்றால் இந்த trailer-யை பாருங்கள்...

தீபன், வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள கேர் ஆப் காதல் திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

‘காதலுக்கு வயது இல்லை’... நம்பவில்லை என்றால் இந்த trailer-யை பாருங்கள்...

தீபன், வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள கேர் ஆப் காதல் திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இம்மாதம் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலரினை நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டுள்ளார். நகைச்சுவை காட்சிகள் நிறைந்து நகரும் இந்த ட்ரைலர் ஆனது தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேர் ஆப் காதல் திரைப்படத்தினை ஹேமம்பர் ஜஸ்தி இயக்கியுள்ளார். ஸ்ரீ ஸ்ரீ சாய் மூவிஸ் மற்றும் பிக் ப்ரிட்ன் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் சேகர், ஜீவன், கார்த்திகேயன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் தீபன், வெற்றி, மும்தாஜ், ஆர்யா, கார்த்திக் ரத்தினம், சோனியா கிரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படமானது கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கேர் ஆப் காஞ்சரபாலம் திரைப்படத்தின் தமிழ் மொழிபெயற்ப்பு ஆகும். கேர் ஆப் காஞ்சரபாலம் திரைப்படம் குறித்து தெரிவிக்கையில்., வெங்கடேஷ் மஹா எழுதி இயக்கியது மற்றும் இந்திய அமெரிக்கரான பிரவீணா பருச்சுரி தயாரிப்பில் உருவானது. இந்த திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்தும், திரைப்பட விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் 2019-ஆம் ஆண்டு ஜீ சினி விருதுகளில் (தெலுங்கு) சிறந்த விமர்சன திரைப்பட விருதைப் பெற்றது.

மேலும் நியூயார்க் இந்திய திரைப்பட விழா மற்றும் மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மும்பையில் நடந்த "இந்திய திரைப்படங்களின் விமர்சகர்களின் சாய்ஸ் விழாவில்" இது சிறந்த திரைப்பட விருதுடன் கௌரவிக்கப்பட்டது, போஸ்டனில் நடந்த காலீடோஸ்கோப் இந்திய திரைப்பட விழாவில் முன்னணி நடிகர் சுப்பா ராவ் "சிறந்த நடிகர்" எனும் கௌரவத்தைப் பெற்றார் மற்றும் ஃபிலிம் கம்பானியனின் "தசாப்தத்தின் 25 சிறந்த தெலுங்கு திரைப்படங்கள்" பட்டியலிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைபடம் தற்போது கேர் ஆப் காதல் என்ற பெயரில் தமிழில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More