Home> Movies
Advertisement

சிறந்த நடிகர் விருதுக்கு நச்சரித்த விஜய் சேதுபதி - ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி நச்சரித்து பெற்றதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

சிறந்த நடிகர் விருதுக்கு நச்சரித்த விஜய் சேதுபதி - ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கிய அவர் அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமானார். அப்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. ஆனால் சமீப காலங்களாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக போவதில்லை. அதேசமயம் வில்லனாக அவர் கலக்கிவருகிறார். மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் வரவேற்பைப் பெற்றன. மேலும், ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதைக்கு தேவையெனில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என்ற கொள்கை பலரால் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த மாமனிதன் படம் வெளியானது. அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதிவரை நடந்தது. அந்த விழாவில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் நிறைவு விழாவில் திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் சிறந்த நடிகருக்கான விருது மாமனிதன் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகை விருது கார்கி படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது.

fallbacks

இந்தச் சூழலில் விஜய் சேதுபதி நச்சரித்துதான் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கினார் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார். அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், கென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்யம் தியேட்டரில் ஒருவாரமாக குட்டிபோட்ட பூனை போல சுற்றி..

விழாக்கமிட்டி, ஜுரி, அமைச்சர் என அனைவரையும் நச்சரித்து சிறந்த நடிகர் விருதை வாங்கிவிட்டார் விருது வெறியர். 'இதெல்லாம் ஒரு பொழப்பா?' என்று பலரும் புளிச்சென துப்பி வருகிறார்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியை அவ்வாறு மாறன் தெரிவித்ததற்காக கமெண்ட்டில் அவரை வெளுத்துவாங்கிவருகின்றனர் சேது ரசிகர்கள்.

மேலும் படிக்க | ‘மானம்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழை மட்ட’ - நயன்தாரா படத்தை புறக்கணித்த ஜிபி முத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More