Home> Movies
Advertisement

பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்! முதல் நாமினேஷனில் புகார்களை அடுக்கிய ஜிபி முத்து

பிக்பாஸ் வீட்டில் முதல் நாமினேஷன் தொடங்கியுள்ளது. ஜிபி முத்து உள்ளிட்டோர் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேட் செய்துள்ளனர்.

பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்! முதல் நாமினேஷனில் புகார்களை அடுக்கிய ஜிபி முத்து

பிக்பாஸ் சீசன் 6 முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை என்றாலும், நாமினேஷன் லிஸ்டில் சிலர் இடம்பிடித்து இருந்தனர். இப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்கள் கன்பெஷன் ரூமில் சென்று நாமினேட் செய்வது இன்று முதல் தொடங்கிவிட்டது. முதல் வைல்டு கார்டு போட்டியாளராக சென்ற மைனா நந்தினியை மற்ற அனைவரையும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப நாமினேட் செய்யலாம். அந்த வகையில் போட்டியாளர்கள்  ஒவ்வொருவராக அழைத்து, இந்த வாரம் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என நினைக்கூடிய பெயர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | அடேங்கப்பா! பிக் பாஸ் குரலின் சொந்தக்காரரின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

அதன்படி, ஏடிகே, சாந்தியை நாமினேட் செய்கிறார். அவர் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையோடு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குவின்ஸி, ரக்சிதாவை நாமினேஷன் செய்திருக்கிறார். அவருக்கு வேறொரு முகம் இருப்பதாக கருதும் குவின்சி, அதனை வெளிப்படுத்தாமல் மறைப்பதாக பிக்பாஸிடம் தெரிவித்துள்ளார். சோஷியல் மீடியாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஜிபி முத்து யாரை நாமினேஷன் செய்ய போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்து இருக்க, அவர் குவின்ஸி பெயரை கூறினார். குறிபிட்ட இரண்டு மூன்று பேர்களுடன் மட்டுமே குவின்ஸி உரையாடிக் கொண்டிருப்பதாகவும், அது சரியாக இருக்காது என கூறி நாமினேஷன் செய்துள்ளார்.

ராபர்ட் மாஸ்டர் ஆயிஷாவை நாமினேஷன் செய்ய, ஆயிஷா விக்ரமன் பெயரை கூறினார். இப்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் இவர்கள் மட்டுமே இருக்கின்றனர். அடுத்தடுத்த புரோமோவில் யார் யாரையெல்லாம் நாமினேஷன் செய்திருக்கிறார்கள் என தெரியவரும். எப்படி பார்த்தாலும் நாமினேஷன் தொடங்கிவிட்டதால் பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் ஆரம்பாகியுள்ளது. இனி வரும் ஒவ்வொருநாளும் களேபரங்களுக்கு பஞ்சம் இருக்காது. 

மேலும் படிக்க | ’எனக்கு ஜோடி நயன்தாரா தான்’ அடம்பிடிக்கும் ஜிபி முத்து; ஆடிப்போன கமல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More