Home> Movies
Advertisement

பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பம்; இந்த மாற்றத்தை கவனிச்சீங்களா

பிக் பாஸ் 5 வது சீசனில் லிவ்விங் ஏரியாவில் அனைத்து போட்டியாளர்களும் வசதியாக அமரும் வகையில் பெரிய சோஃபோ போடப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பம்; இந்த மாற்றத்தை கவனிச்சீங்களா

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். 

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். போட்டியாளர்களை அறிமுகம் செய்து, நிகழ்ச்சியை துவக்குவதற்கு முன் பிக்பாஸ் வீட்டை வழக்கம் போல் சுற்றி காட்டினார் நடிகர் கமல்ஹாசன்.

ALSO READ | Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது

18 போட்டியாளர்களின் விவரம்:

ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, பாடகி இசைவாணி, யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா, சின்னத்திரை நடிகர் ராஜூ ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துதகொண்டுள்ளனர்.

வீட்டின் சிறப்பு:

* வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் சைஸ் வாரியாக கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. இது வீட்டிற்கு புதிய பிரம்மாண்டத்தை கொடுக்கிறது.

* அதேபோல் திரும்பிய பக்கமெல்லாம் 5 என்ற எண் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் முகப்பில் பிரம்மாண்ட 5 வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. 

* வீட்டின் என்ட்ரன்ஸ் கதவு அருகிலேயே பிரம்மாண்டமாக மரம் போன்ற பச்சை நிற வடிவம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மவீட்டின் உட்புறத்தில் மர வேலைப்பாடுகளால் ஆன உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* வீட்டின் பல இடங்களில் நியான் லைட் போன்று சிவப்பு நிறத்தில் ஆன பூ போன்ற வடிவத்தை காண முடிகிறது. இது பஞ்சபூதங்களை குறிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

* லிவ்விங் ஏரியாவில் அனைத்து போட்டியாளர்களும் வசதியாக அமரும் வகையில் பெரிய சோஃபோ போடப்பட்டுள்ளது. இதே போல் பல இடங்களில் சிறிய சோஃபோக்கள், சேர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* சென்று முறை போல் இந்த முறையும் சிறை அமைக்கப்பட்டிருக்கு. ஆனால் இந்த முறை நீச்சல் குளம், பாதாள சிறையாக மாற்றப்பட்டுள்ளது. 

* பெட் ரூம் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிருந்தாலும் இரு அறைகளுக்கும் இடையே கண்ணாடி போன்ற எந்த தடுப்பும் வைக்கப்படவில்லை. பெட் ரூமின் மேற்பகுதியில் இயற்கையான சூரிய வெளிச்சம் அறைக்கும் வரும் வகையில் கண்ணாடி போன்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. 

* போட்டியாளர்கள் வசதியாக அமரும் வகையில் பெரிய சோஃபாவுடன், வெளிச்சமான பளீச்சென்ற தோற்றத்தில் கன்ஃபஷன் அறை அமைக்கப்பட்டுள்ளது. சோஃபாவின் பின்புறம் சிறகுகள் விரிந்திருப்பதை போன்ற அமைப்பும், உட்புற கதவில் பறக்கும் சிறகுகளுடன் கூடிய ஓவியமும் வரையப்பட்டுள்ளது.

ALSO READ | Big Boss 5: பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் சுடச்சுட…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More