Home> Movies
Advertisement

பிக்பாஸ் முதல் நாள்: இவர்தான் இந்த வார கேப்டன்; வெளியான ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் முதல் நாள்: இவர்தான் இந்த வார கேப்டன்; வெளியான ப்ரோமோ

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். 

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் நேற்று வெளியானது. அதன்படி இந்த நிகழச்சியில் ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, பாடகி இசைவாணி, யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா, சின்னத்திரை நடிகர் ராஜூ ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துதகொண்டுள்ளனர்.

ALSO READ | Big Boss 5: பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் சுடச்சுட…

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. போட்டியாளர்களிடம் பேசும் பிக்பாஸ், இந்த பிக்பாஸ் வீட்டிற்கு கேப்டனாகும் தகுதி தனக்கு இருக்குன்னு நினைக்கும் 5 பேரை அழைக்கிறார்.

அதில் ராஜு, சின்ன பொண்ணு, நமீதா, நிரூப் சந்திப், பாவனி ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து பேசிய  பிக்பாஸ் உங்களில் யார் எந்த அணிக்கு தலைவராக போகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த ராஜு நான் பத்ரூம் க்ளினிங் அணிக்கு கேப்டனாகலாம் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

இதனைக் கேட்ட பிரியங்கா அது தான் ஈஸி என கமெண்ட் கொடுத்ததுடன் நாங்கல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி ஃபிரண்டானோம் என கோஷம் போடுகிறார். இதனால் அந்த இடமே கலகலப்பாகிறது.

ALSO READ | Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More