Home> Movies
Advertisement

VJ Archana: மாயா-பூர்ணிமாவுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா! வைரல் வீடியோ..

VJ Archana Dancing With Maya Poornima: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா, தனது சக போட்டியாளர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

VJ Archana: மாயா-பூர்ணிமாவுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா! வைரல் வீடியோ..

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர், விஜே அர்ச்சனா. இவர், தனது சக போட்டியாளர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் 7:

கடந்த அக்டோப் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த வாரம் 106 நாட்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தாலே அதை சுற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களும் தாெடரும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் இந்த பிக்பாஸ் சீசனை சுற்று சர்ச்சைகள் மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தன. துணை நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், திரை கலைஞர்கள், டிஜிட்டல் முகங்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் நுழைந்தனர். பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், இரண்டு வைல்டு கார்டு, தலைக்கு மேல் பிரச்சனைகள் என இந்த நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் உருவாகின. என்னதான் பிறர் இந்த சீசன் சுத்த மொக்கையாக இருக்கிறது என்று கூறினாலும், இளைஞர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நிறைய டிஆர்பியுடன் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றது. 

பிரதீப்புக்கு ஆதரவாக நின்ற அர்ச்சனா..

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த முறை பல புதிய விதிமுறைகள் போடப்பட்டன. இரண்டுமுறை இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு செக்மெண்டும் வந்தன. அப்படி, போட்டி ஆரம்பித்து 28 நாட்கள் கழித்து, போட்டியாளராக நுழைந்தவர் ஆர்.ஜே.அர்ச்சனா. இவர் வந்த முதல் வாரமே போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார். 

fallbacks

வீட்டிற்குள் அனைவரும் கேங்காக வந்து சண்டை போட்டாலும், அதை எதிர்த்து கேட்ட அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. பிரதீப்பின் ரெட் கார்டு விவகார்த்தில் பெரும்பாலானோர் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூற, இவர் மட்டும் “என்னிடம் அவர் அப்படி பழகியதில்லை..அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டாம்” என்று கூறினார். இது, பிரதீப் ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது. 

டைட்டில் வின்னர்..

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த வாரம் நடைப்பெற்றது. பிக்பாஸில், கடைசியாக டாப் 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், வைல்டு கார்டு போட்டியாளர்களான அர்ச்சனா, தினேஷ் ஆகிய 2 பேர் இருந்தனர். வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் இருந்த விஷ்ணு, மாயா, மணிச்சந்திரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்னர். பிக்பாஸில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் யாருக்குமே இதுவரை டைட்டில் கொடுக்கப்பட்டதில்லை. முதல் முறையாக இது அர்ச்சனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சனா டைட்டில் வென்றதை, பிரதீப்பே வென்றது போல அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இந்த நிலையில், இவர் வெளியில் வந்தவுடன் பிரதீப் பக்கம் நிற்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் படிக்க | Bigg Boss Tamil: உனக்காக நான் இருப்பேன்! அர்ச்சனாவிற்கு சப்போர்ட் செய்த மாயா!

மாயாவுடன் குத்தாட்டம் போட்ட அர்ச்சனா..

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்த இல்லத்திற்குள் பார்டி நடந்துள்ளது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ‘மாஸ் மரணம்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில், முதலில் மாயா, நிக்ஸன், பூர்ணிமா ஆகியோர் நடனமாட அவர்கள் அரச்சனாவையும் அழைத்து நடனமாடுகின்றனர். அர்ச்சனாவும் அவர்களுடன் ஆனந்தமாக குத்தாட்டம் போடுகிறார். 

ரசிகர்கள் அதிர்ச்சி..

அரச்சனா போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, மாங்கு மாங்கென்று அவருக்கு ஓயாமல் பி.ஆர் வேலை பார்த்த பிரதீப் ரசிகர்கள், அர்ச்சனா ‘புல்லி கேங்’ உடன் குத்தாட்டம் வீடியாவை பார்த்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். டைட்டிலை வென்ற பிறகு தான் இருக்கும் இடத்தையே மறந்து விட்டாரே அர்ச்சனா என அவரை போட்டு சமூக வலை தளங்களில் தாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘அயலான்’ படம் பிடிச்சிருக்கா? அப்போ ‘இந்த’ படங்களையும் பாருங்க! கண்டிப்பா பிடிக்கும்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More