Home> Movies
Advertisement

Big Announcement ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் ராஜமெளலியின் RRR

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு (Pongal Festival 2022) முன்பாகவே 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Big Announcement ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் ராஜமெளலியின் RRR

பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை அடுத்து எஸ்.எஸ். ராஜமவுலி (Director SS Rajamouli) இயக்கத்தில் உருவாகி வரும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உள்ள 'ஆர்ஆர்ஆர்' (RRR) திரைப்படம் வெளியிடப்படும் நாள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர் (Jr NTR), ராம் சரண் தேஜா (Ram Charan), ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு (Covid-19 Pandemic Lockdown) காரணமாக படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், பட வெளியீடு தள்ளிப்போகும் எனத் தகவல்கள் வெளியாகின. 

அதற்கு அடுத்து அடுத்த ஆண்டு பொங்கல் ஆண்டு வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியானதால், திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு படங்கள் வெளியானால் வியாபாரம் பாதிக்கப்படும், தியேட்டர்கள் கிடைப்பதும் கேள்வி குறியாக இருக்கும் எனத் திரை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

ஆனால் பொங்கல் அன்று 'ஆர்ஆர்ஆர்' (RRR) படம் வெளியாகும் என எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நீடித்தது. 

ALSO READ | Watch: ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர்

'ஆர்ஆர்ஆர்' (RRR) திரைப்படம் எப்பொழுது வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், இன்று படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, ஜனவரி 7 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் அன்று தல அஜித் நடிக்கும் 'வலிமை' படமும் (Valimai) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More