Home> Movies
Advertisement

"பாஸ்கர் ஒரு ராஸ்கல்"- ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்!

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’’. இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமான நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேலும் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி படத்தின் ரீமேக்காகும். அரவிந்த்சாமி சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளார் இயக்குநர் சித்திக். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Read More