Home> Movies
Advertisement

முத்தக் காட்சியால் சர்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா!

தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பைரவா கீதா ட்ரைலர் வெளியானது!

முத்தக் காட்சியால் சர்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா!

தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பைரவா கீதா ட்ரைலர் வெளியானது!

தெலுங்கு திரையுலகில் சர்சைகளுடன் திரைப்படங்களை வழங்குபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அவரது அடுத்தப்படைப்பான 'பைரவா கீதா'-வின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான சர்சையும் தலை தூக்கியுள்ளது.

தயாரிப்பாளர் பாஸ்கருடன், ராம்கோபால் வர்மாவும் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் வர்க்க போராட்டங்களின் வன்முறை பின்னணி பற்றி பேசுவாதாக தெரிவக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தா இயக்கும் இப்படத்தில் தனஞ்செய் மற்றும் இர்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கு திரையுலகில் 1989-ல் சிவா திரைப்படத்தின் மூலம் காலடியெடுத்து வைத்த ராம்கோபால் வர்மா, பின்னர் 1995-ல் பாலிவுட்டிற்கு சென்று ரங்கீலா மூலம் புகழ் பெற்றார். அதிலிருந்து பாலிவுட்டில் சத்யா, கம்பெனி, சர்க்கார் உள்ளிட்ட நிறைய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அதே வேலையில் சர்சகளும் அவரை விட்ட விலகியது இல்லை.

இந்நிலையில் தற்போது அவர் தயாரிப்பாளர் பாஸ்கருடன் இணைந்து தயாரிக்கும் படமாக பைரவா கீதா ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரின் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சி மீண்டும் இவரை சர்சைக்குள் இழுத்துள்ளது.

Read More