Home> Movies
Advertisement

சில்க் ஸ்மிதா பாடலுக்கு நடனமாடிய விஜய்? உங்கள் கற்பனைக்கு ஒரு எண்ட்-யே இல்லையா? வைரல் வீடியோ

முதல் பாடலே இவ்வளவு வரவேற்பு பெற்றது என்றால் நாளை மறுநாள் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜின்கானா பாடல் வெளியாகிறது. 

சில்க் ஸ்மிதா பாடலுக்கு நடனமாடிய விஜய்? உங்கள் கற்பனைக்கு ஒரு எண்ட்-யே இல்லையா? வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் கிங் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்புக்கு படம் வெளியாகலாம். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் வெளியாகி ஹிட் ஆனது. ஒரு மாதத்தில் 185 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது ஹலமிதி ஹபிபோ பாடல். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு. 

fallbacks

மேலும் படிக்க | விஜய் பாடியிருக்கும் ‘பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

முதல் பாடலே இவ்வளவு வரவேற்பு பெற்றது என்றால் நாளை மறுநாள் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜின்கானா பாடல் வெளியாகிறது. அதற்கான புரோமோ வீடியோ நேற்று வெளியானது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலர்ஃபுல்லாக அமைந்துள்ள இந்தப் புரோமோவில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் மற்றும் அனிருத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.‘ஜாலியோ ஜிம்கானா’ எனத் தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். அனிருத் இசையில் கு.கார்த்திக் எழுதியுள்ள இப்பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரபிக் குத்து போல இந்தப் பாடலும் இணையத்தைக் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டில் விஜய்யின் காஸ்ட்யூம் இதுவா?!

இந்நிலையில், ‘ஜாலியோ ஜிம்கானா’ புரோமோ வீடியோவுக்கு மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா, நடிகர் தியாகராஜன் இணைந்து நடித்த அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடலை வைத்து சூப்பராக எடிட் செய்துள்ளனர். இந்த கிரியேட்டிவிட்டியை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு லிப் சிங்க் உடன் பாடல் எடிட் ஆகியுள்ளது. அதிலும் நடிகர் விஜய் பாடலை பாடுவது போன்று இருப்பது ரசிக்கும் படி உள்ளது. இதில் நெல்சனையும் வைத்து ஃபன் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More