Home> Movies
Advertisement

Beast: விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தது பீஸ்ட்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் சாதனையை அவரது அடுத்த திரைப்படமான பீஸ்ட் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast: விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்தது பீஸ்ட்

விஜய் 47-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் நடித்து வரும் 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியான பீஸ்ட் (Beast) பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21 மணி நேரத்தில் 2.73 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மிக வேகமாக அதிக லைக்ஸ்கள் பெற்ற சாதனையை பீஸ்ட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெற்றுள்ளது. 

 

 

 

 

ALSO READ | Thalapathy Vijay: விஜய் பிறந்தநாள் சிறப்பு வாட்ஸ்அப் ஸ்டேடஸை வெளியிட்டார் தாணு

முன்னதாக விஜய்யின் (Actor Vijay) மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்தப் படத்தில் பிரபல நடிகை அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும், அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Master Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More