Home> Movies
Advertisement

மாஸான லுக்கில் விஜய்! வைரலாகும் பீஸ்ட் படத்தின் புகைப்படம்!

பீஸ்ட் படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது  

மாஸான லுக்கில் விஜய்! வைரலாகும் பீஸ்ட் படத்தின் புகைப்படம்!

தளபதி விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகிக் கொண்டிருக்கும் படம் 'பீஸ்ட்'.  இப்படத்தில் பூஜா ஹெக்டே , செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபருக்கி, ஆகியோர் நடித்துள்ளனர்.

fallbacks

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.  தளபதி நடிக்கும் இந்த 65வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.  அதனையடுத்து டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  படம் பற்றிய அறிவிப்பு வெளியானத்திலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

தளபதியின் பிறந்தநாளன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.  அதிலிருந்து இப்படத்தின் அப்டேட் குறித்து படக்குழு எப்போது வெளியிடும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.  மேலும் இப்படத்தின் முதல் சிங்கில்ளையும் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில் இப்படத்தின் 100 வது நாள் ஷூட்டிங் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படக்குழு மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  கோவிட் காரணமாக படத்தின் பணிகள் தள்ளிபோடப்பட்டு பின்பு தொடங்கிய நிலையில் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ALSO READ அடுத்த 4 மாதங்களில் வெளிவர இருக்கும் டாப் ஹீரோ படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More