Home> Movies
Advertisement

இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்


பாலாவும், சூர்யாவும் இணையும் படத்துக்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது.  

இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. யாராலும் கண்டுகொள்ளப்படாத, ஒதுக்கப்பட்ட களமும், மனிதர்களுமே இவரது திரைப்படங்களில் இடம்பெறும்.

பத்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் பாலா இதுவரை பல விருதுகளை வென்றிருக்கிறார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்கினார்.

fallbacks

ஆனால், படம் திருப்தி தராததால் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து மீண்டும் வர்மா படத்தை இயக்க வைத்தது தயாரிப்பு தரப்பு. மிகச்சிறந்த படைப்பாளியான பாலாவுக்கா இந்த கதி என பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க | விக்ரம் வெற்றியால் உயரும் கமலின் சம்பளம் - கொடுக்குமா லைகா?

அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த பாலா சூர்யாவுடன் இணையவிருப்பதாக அறிவித்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்த சூழலில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கவிருக்கிறது.

 

இந்நிலையில் இயக்குநர் பாலா இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பாலா - சூர்யா இணைந்திருக்கும் படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி படத்துக்கு வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வணங்கான் படத்தின் போஸ்டரை வெளியிட்டு, உங்களுடன் மீண்டும் இணைந்ததில்  பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா” என குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சொத்து பிரச்சனையால் தத்தளித்த சிவாஜி குடும்பம்; அந்த திருமணம் தான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More