Home> Movies
Advertisement

‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை பற்றியது என  ரசூல் பூக்குட்டி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் பாகுபலி தயாரிப்பாளர் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். 

ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இணைந்து நடித்திருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியானது.  ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து இருந்த ஆர்.ஆர்.ஆர் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நல்ல கவனத்தைப் பெற்றது.

ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம், அதிக வசூல் செய்த இந்தியப் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கர் விருது வென்றவரும் ரஜினியின் எந்திரன், 2.O உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவருமான பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டியின் ஆர்.ஆர். ஆர் படம் பற்றிய பதிவு ஒன்று சர்ச்சையாகியுள்ளது.

அதாவது,  ஆர்.ஆர்.ஆர் படம் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட நபர் ஒருவர், அது குப்பைப் படம் என விமர்சித்திருந்தார். அந்தப் பதிவில் வந்து கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி, ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை” என கமெண்ட் செய்திருந்தார். அவரது இந்த கமெண்ட் தான் தற்போது அத்தனை சர்ச்சைகளுக்கும் மூல காரணமாக அமைந்துள்ளது.

fallbacks

சமூக வலைதளங்களில் ரசூல் பூக்குட்டியின் இந்தக் கருத்து பேசுபொருளாகியுள்ள நிலையில் பலர் அவருக்கு எதிராக போர்க்கொடி  தூக்கியுள்ளனர். தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியை ரசூல் பூக்குட்டியால் பொறுத்துக் கொள்ள முடியாததால்தான் இவ்வாறு கூறியிருப்பதாகவும்கூட சிலர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா தற்போது களத்தில் இறங்கி உள்ளார்.

fallbacks

ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஆர்.ஆர்.ஆர் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை என தான் நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார். ஒருவேளை உங்கள் கூற்றுப்படி அது அப்படிப்பட்ட படமாகவே இருந்தாலும் கூட அதில் என்ன தவறு எனவும் ரசூல் பூக்குட்டியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையை படமாக எடுப்பது அவ்வளவு தவறான விஷயமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | ‘RRR ஒரு Gay மூவி!’ - ‘எந்திரன்’ பட பிரபலத்தின் பதிவால் பற்றி எரியும் ட்விட்டர்!

fallbacks

 

இந்நிலையில் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டாவின் இந்தப் பதிவுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

ஆர்.ஆர்.ஆர்  மட்டுமல்ல; எந்த ஒரு படத்தையும் விமர்சிக்க அனைவருக்குமே உரிமையுள்ளது. ஆனால், விமர்சனம் என்கிற பெயரில் தன்பாலின ஈர்ப்பாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிடுவது சரியான அணுகுமுறை அல்ல எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More