Home> Movies
Advertisement

பாகுபலி-2 படத்தின் டிரெய்லர் தேதி வெளியீடு!!

பாகுபலி-2 படத்தின் டிரெய்லர் தேதி வெளியீடு!!

ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி 2-ம் பாகத்தின் டிரெய்லர் வருகிற மார்ச் 16-ம் தேதி தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பாகுபலி-2 தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வருகிறது. பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் தேதி நிறைவடைந்தது.

பாகுபலி முதல் பாகம் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More