Home> Movies
Advertisement

பாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை

பாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை

பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.

இந்நிலையில் பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 பெற்றுள்ளது.

Read More