Home> Movies
Advertisement

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்; முக்கிய அப்டேட் வெளியீடு

இந்த படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் நயன்தாரா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்; முக்கிய அப்டேட் வெளியீடு

ஷாருக்கானின் (Shah Rukh Khan) அடுத்த படம் அட்லீ குமார் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக அட்லி உயர்ந்துள்ளார். 

ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி (Atlee) இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ALSO READ | Did You Know, ராஜா ராணி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர்தானா....

இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்கள் மொத்தம் 180 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மாத காலம் ஷூட்டிங் என்பதால் இந்த படம் ரிலீஸாக எப்படியும் இன்னும் 2 வருடங்கள் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. மேலும் இதில் ஷாருக்கானுக்கு இரண்டு வேடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்ட்டே ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட அட்லி திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை அட்லி இயக்குகிறார் என்றதும் எந்தப் படத்தின் தழுவல் இது என்று ரசிகர்கள் கேட்டனர். அதன்படி இந்த படம் 2006 இல் உதயன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் மேலோட்டமான தழுவல் இந்தப் படம் என்கின்றன செய்திகள்.

ALSO READ | அட்லி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்.....!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More