Home> Movies
Advertisement

சைக்கிளிங் போட்டி - சூர்யாவுக்கு நன்றி கூறிய ஆர்யா


சைக்கிளிங் போட்டிக்கான ஆர்யா அணிக்குரிய ஜெர்ஸியை வெளியிட்ட சூர்யாவுக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சைக்கிளிங் போட்டி - சூர்யாவுக்கு நன்றி கூறிய ஆர்யா

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யாவும், இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால்இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்டுக்கு அறிவை அழைத்தோம் - விக்னேஷ் சிவனின் விளக்கம்

இதற்கிடையே நடிகர் ஆர்யா நடிப்பைத் தாண்டி சைக்கிளிங்கிலும் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. பா. இரஞ்சித்தும், விக்ரமும் இணைந்திருக்கும் படத்துக்கு பூஜை சமீபத்தில் போட்டபோதுகூட ஆர்யா சைக்கிளிங் சென்றபோது அதில் கலந்துகொண்டார்.

 

தற்போது அவர் லண்டனில் நடைபெறவுள்ள சைக்கிள் போட்டியிலும் தனது குழுவினருடன் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் ஆர்யா அணிக்கான ஜெர்ஸியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதனை ஆர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவில் குரங்கு அம்மை பீதி: 9 ஆக உயர்ந்த எண்ணிக்கை, அவசர கூட்டத்துக்கு அழைப்பு

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்

மேலும் படிக்க | டாப் கியரில் எகிறும் சிவகார்த்திகேயனின் மாஸ்! அடுத்த படத்தில் சங்கர் மகளுடன் ரொமான்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More