Home> Movies
Advertisement

விஜய்- அஜித் காம்போவில் பான் இந்தியா படம்? வெளியான உண்மைத் தகவல்!

நடிகர்கள் விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே எனும் ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளனர். 

விஜய்- அஜித் காம்போவில் பான் இந்தியா படம்? வெளியான உண்மைத் தகவல்!

நடிகர்கள் விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே எனும் ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளனர். 

நேருக்கு நேர் படத்திலும் இருவரும் நடிப்பதாக இருந்த நிலையில் அஜித் நீக்கப்பட்டுக் கடைசியில் அவருக்குப் பதிலாக நடிகர் சூர்யா இணைந்தார். அதன் பின்னர் விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்கும் சூழல் எழவில்லை. சினிமாவைப் பொறுத்தவரை விஜய்யும் அஜித்தும் ரசிகர்களால் எதிரெதிர் துருவங்களாக அறியப்படுகின்றனர்.

இதனால் இவ்விருவரும் இணைந்து நடிப்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆனால் இருவரையும் இணைத்து படம் எடுக்க சில இயக்குநர்கள் தயாராகவே உள்ளனர். குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். 

இதற்கான விதையை ஆளமாக நட்டதும்கூட விஜய்தான். அஜித் நடிப்பில் மங்கத்தா வெளியான சமயத்தில் வெங்கட் பிரபுவை அழைத்து அப்படத்துக்காக விருந்து வைத்து மகிழ்ந்துள்ளார் விஜய். 

fallbacks

விஷயம் அத்தோடு முடியவில்லை; மங்காத்தாவில் அர்ஜுன் நடித்த ரோலைத் தன்னிடம் கூறியிருந்தால் அதில் தானே நடித்திருப்பேனே எனவும் கூறினாராம் விஜய். இது வெங்கட் பிரபுவை ஷாக் ஆக்கியுள்ளது. இதையடுத்து விஜய்- அஜித் காம்போவை வைத்து படம் இயக்கத் தான் தயாராகவே உள்ளதாக பல்வேறு தருணங்களில் வெங்கட் பிரபு கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வரவுள்ளதாகவும் கடந்த 2 நாட்களாக ஒரு தகவல் பரவிவருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இந்தத் தகவலைப் பரப்பிவருகின்றனர். இந்நிலையில் இதுபற்றிய புதிய தகவல் தற்போது வந்துள்ளது.

மேலும் படிக்க | தொடர் வசூல் வேட்டை - கோலிவுட்டின் ஆல்டைம் பெஸ்ட்டாகிறதா கமலின் விக்ரம்?

 

அதன்படி, இத்தகவல் உண்மையில்லையாம். விஜய்யையோ, அஜித்தையோ இப்படம் தொடர்பாக வெங்கட் பிரபு சந்திக்கவில்லை எனவும் சொல்லப்போனால், இப்படத்துக்கு அவர் இன்னும் கதையே எழுதவில்லை எனவும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபுவைப் பொறுத்தவரை, நாகசைதன்யாவை வைத்து படமொன்றை இயக்கிவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்குப் படமாக இது அமையவுள்ளது.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

 

Read More