Home> Movies
Advertisement

அனுஷ்கா-விற்கு போட்டியாக அனுஷ்கா - வெளியானது வீடியோ!

அனுஷ்கா சர்மா-வின் பரி" படத்தின் டீசர் வெளியானது!

அனுஷ்கா-விற்கு போட்டியாக அனுஷ்கா - வெளியானது வீடியோ!

அனுஷ்கா சர்மா-வின் பரி" படத்தின் டீசர் வெளியானது!

பாலிவுட் பிரபலம் அனுஷ்கா சர்மா-வின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் "பரி". இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பரி என்னும் இந்தி சொல்லுக்கு "தேவதை" என்று பொருள்படும். ஆனால் இப்படத்தின் டீசரில் அனுஷ்கா ஷர்மா கண்ணில் ரத்தம் வழிய அகோரமாக காட்சியளிக்கின்றார். படத்தில் தலைப்பிற்கும், காட்சிக்கும் சம்பந்தம் இல்லையே என என்னத் தோன்றினாலும், வழக்கத்திற்கு மாறானது இல்லை என்பது எதார்த்தம்.

சமீபத்தில், தென்னிந்திய நடிகை அனுஷ்கா செட்டி நடிப்பில் உருவாகும் பாகமதி திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ட்ரைலரிலும் அனுஷ்கா இதேப் போன்று காட்சியளித்தார். கதைக்களம் வேறாக இருப்பினும் சம காலத்தில் ஒரே பெயர் கொண்ட நாயகிகளின் ஒரே மாதிரியான திரைப்பட முன்னோட்டங்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட் அனுஷ்காவின் பரி திரைப்படத்தினை இயக்குனர் பிரசித் ரோயால் இயக்க, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிலின் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.

நேற்று வெளியான இப்படத்தில் டீசரில் அறிவித்துள்ளதாவது.. வரும் மார்ச் 2 ஆம் நாள் இப்படம் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர். அதாவது ஹோலி பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது!

Read More