Home> Movies
Advertisement

அண்ணா சீரியல்: பாண்டியம்மாவை சிக்க வைத்த சௌந்தரபாண்டி.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?

Anna Today's Episode Update: நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அண்ணா சீரியல்: பாண்டியம்மாவை சிக்க வைத்த சௌந்தரபாண்டி.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?

Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | Kalki 2898 AD Movie Review : கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

அதாவது, பாண்டியம்மாவை போலீஸ் கைது செய்ய போகும் போது அவர் சௌந்தரபாண்டியை பார்த்து கடைசியில் என்னை மாட்டி விட்டுட்டியே டா என்று திட்டி விட்டு செல்கிறாள். மறுபக்கம் பரணியும் சண்முகமும் சௌந்தரபாண்டி தப்பிச்சிடாரே என்று வருத்தப்படுகின்றனர். 

அதனை தொடர்ந்து பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவெடுத்த நிலையில் பரணி ஷண்முகம் பாண்டியம்மாவை சந்தித்து நீங்க உண்மையை சொல்லலைனா உங்களுக்கு தான் பெருசா தண்டனை கிடைக்கும், உங்க தம்பி தப்பிச்சிடுவாரு என்று சொல்ல பாண்டியம்மா உண்மையை சொல்ல முடிவெடுக்கிறாள். 

அடுத்ததாக பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த அவள் உண்மையை சொல்ல தயாராக சௌந்தரபாண்டி கோவில் நகைகளை பாண்டியம்மாவிடம் கொடுத்து போட்டு பார்க்க சொல்லி எடுத்த போட்டோவை காட்டி என் அக்கா தான் நகையை திருடி இருக்கா என்று கோர்த்து விடுகிறார். இதனால் நீதிமன்றம் பாண்டியம்மாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை விதிக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More